– காத்தான்குடி மாணவி ஸனீஜா அனஸ் விஞ்ஞானப் பிரிவில் 3A, மாவட்டத்தில் 5வது இடம்!

exam-MJ

தற்பொழுது 2012 க.பொ.த. உ/த பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகி இருக்கின்றன. இந்தவகையில் காத்தான்குடி மீராபாலிகா மாணவி முகம்மது அனஸ் பாத்திமா ஸனீஜா, விஞ்ஞானப் பிரிவில் 3 பாடங்களிலும் 3 ‘ஏ’ பெறுபேறுகளைப்பெற்று மருத்துவத்துறைக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். மாவட்டத்தில் 5வது ‘ரேங்’ என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாணவி பாத்திமா ஸனீஜா, காத்தான்குடி 3, மெத்தைப்பள்ளி வீதி, ஆசிரியர் RT. அனஸ், ஆசிரியை பரீதா அனஸ் ஆகியோரின் புதல்வியாவார். 2011 ல் இடம்பெற்ற க.பொ.த உ/த பரீட்சையில் இவர்களின் மற்றுமொரு புதல்வியான பாத்திமா ஸீனா மருத்துவத்துறையில் 3 பாடங்களில் 3 ‘ஏ’ பெறுபேறுகளைப் பெற்று மாவட்டத்தில் 2ம் இடத்துடன் மருத்துவத்துறைக்குத் தேர்வு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது வெளியாகிக்கொண்டிருக்கும் பரீட்சை பெறுபேறுகளின் மேலதிக விபரங்கள் தொடர்ந்து வெளிவரும்.

மாணவி பாத்திமா ஸனீஜா அவர்களுக்கு எமது இணையத்தளம் சார்பாகவும், எமது வாசகர்கள் சார்பாகவும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Published by

One response to “– காத்தான்குடி மாணவி ஸனீஜா அனஸ் விஞ்ஞானப் பிரிவில் 3A, மாவட்டத்தில் 5வது இடம்!”

  1. best results from same family exactly like the island firsts from hambantota……what a co incident……..

Leave a reply to mohamed Cancel reply