சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி தமிழக அரசு நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டிற்கு இருவாரத்தடை விதித்திருக்கிறது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
திரைப்படம் இஸ்லாமியரை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகக் குறைகூறி பல்வேறு முஸ்லீம் அமைப்புக்கள் விஸ்வரூபத்திற்குத் தடை விதிக்கவேண்டுமெனக் கோரிவரும் வேளையில் இந்த இருவாரத்தடை ஆணை வெளியிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
மாநில உள்துறை செயலர் அத்தகைய ஆணை வெளியிட்டு விட்டதாகவும், அவ்வாணை அனைத்து திரையரங்குகளுக்கும் நாளை அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாளை மறுநாள் ஜனவரி 25 அன்று விஸ்வரூபம் வெளியிடுவப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
BBC/Tamil
Leave a reply to சங்கர்லால் Cancel reply