‘விஷ்வரூபம் திரைப்படத்துக்கு இருவாரத் தடை’

kamalசட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி தமிழக அரசு நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டிற்கு இருவாரத்தடை விதித்திருக்கிறது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

திரைப்படம் இஸ்லாமியரை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகக் குறைகூறி பல்வேறு முஸ்லீம் அமைப்புக்கள் விஸ்வரூபத்திற்குத் தடை விதிக்கவேண்டுமெனக் கோரிவரும் வேளையில் இந்த இருவாரத்தடை ஆணை வெளியிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

மாநில உள்துறை செயலர் அத்தகைய ஆணை வெளியிட்டு விட்டதாகவும், அவ்வாணை அனைத்து திரையரங்குகளுக்கும் நாளை அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாளை மறுநாள் ஜனவரி 25 அன்று விஸ்வரூபம் வெளியிடுவப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

BBC/Tamil

Published by

One response to “‘விஷ்வரூபம் திரைப்படத்துக்கு இருவாரத் தடை’”

  1. சங்கர்லால் Avatar
    சங்கர்லால்

    சகோதரர் பாக்கியராசன் கருத்தே என் கருத்தும்

    கமலின் வருமானத்தை பற்றிய கவலை இருப்பவர்கள் எங்காவது பிச்சை எடுத்து அவருக்கு கொடுக்கலாம் நானும் என்னால் முடிந்ததை தருகிறேன் ஆனால் கூட வாழும் என் சமூகத்தின் ஒரு அங்கத்தினரை வில்லனாக சித்தரித்து வரும்படி பார்க்க நினைக்கும் அவர் படத்திற்கு நான் எதிரி தான்..

    கமலின் வருமானத்திற்கு நீங்கள் கவலைபடுங்கள் நான் என் சகோதரர்களின் ஜனநாயகத்திற்கு நான் துணை நிற்பேன்..

    என்னை போன்ற லட்சாதி லட்சம் இந்தியகளின் எண்ணம் இதுதான் ஒரு கலை கூத்தாடியின் கருத்து சுதந்திரத்துக்காக அண்ணன் தம்பியாக பழகும் இரண்டு சமூகத்தின் ஒற்றுமை கேள்வி குறியாக வேண்டுமா?

    எந்த ஒரு சமூகத்தையும் கருத்தால் தாக்கி அவர்கள் மனதை புண்படுத்தி தான் படமெடுப்பேன் ,மற்ற இயக்குனர்கள் போல ஜனரஞ்சகமான படம் எடுக்க மாட்டேன் என்றால் …தயவு செய்து படமே நீ எடுக்காதே…உன் ஒருவனின் கருத்து சுதந்திரத்திற்காக மாமன் மச்சானாக பழகும் இரு சமூகமும் இன்னும் எத்தனை நூற்றாண்டு களுக்கு எதிர் எதிர் திசையில் நிற்க வேண்டும்??

    கமலிடம் சில கேள்விகள்: இஸ்லாமியர்களின் புனித நூலான புனித குர்ஆன் ,அவர்களுடைய தொழுகை , நபிகள் நாயகம் , குர்ஆன் வசனங்கள், இவை இல்லாமல் உங்களால் படம் எடுக்கவே முடியாதா? வேறு கதை களமே இந்த உலகத்தில் இல்லையா? இதற்கு முன்னரும் இது போல் செய்து நிறைய எதிர்ப்பை சந்தித்த நீங்கள் மீண்டும் இதை வலுகாட்டயமாக செய்வதன் நோக்கம் என்ன? ஆஸ்கார் ஆசையில்
    இஸ்லாமியரை இழிவாக சித்தரித்து படம் எடுத்தால் ஆஸ்கார் கிடைக்கும் என்று எதாவது ஒரு அமெரிக்க ஆஸ்கார் எஜன்ட் சொன்னதை கேட்டு இப்படி செய்கிறீர்களா?

Leave a comment