காத்தான்குடியின் பிரபல டைலா் (New Mod Najeem’s) அவா்களுடைய சகோதரா் அல்.ஹாஜ் SHM.இஸ்ஸதீன் அவா்கள் (02.01.2013 புதன்கிழமை) காலமானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜிஊன்.
புதிய காத்தான்குடி தள வைத்தியசாலையின் – பின் வீதியில் வசித்து வந்த மர்ஹூம் அல்.ஹாஜ். SHM. இஸ்ஸதீன் அவா்கள் ” நீரிழிவு நோய் ” காரணமாக சில காலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவா் மிக நீண்ட காலமாக தப்லீக் ஜமாஅத்தில் இனணந்து கொண்டு பணி செய்தவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஜனாஸா புதிய காத்தான்குடி நுாராணியா ஜூம்ஆ மஸ்ஜிதில் தொழுவிக்கப்பட்டு, மீரா ஜூம்ஆ மஸ்ஜிதின் மேட்டு நில மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரது மறைவுக்கு எமது உள்ளுர் மற்றும் கடல் கடந்து வாழும் வாசகர்கள் சார்பாக அனுதாபங்களை அன்னாரது குடும்பத்தினர்களுக்குத் தெரிவிப்பதுடன் மறுமையில் அன்னாருக்கு சுவர்க்கத்தை இறைவன் வழங்கவேண்டியும் பிரார்த்திக்கின்றோம்.
Leave a reply to mohd fareed Cancel reply