மட்டு. கடுகதி ரயில் ‘பாடுமீன்’ இரண்டு மணிநேரம் தாமதம்

9532294-colombo-sri-lanka--aug-16-arriving-by-trainin-the-scenic-old-british-rrailway-station-of-colombo-for[1]கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்திலிருந்து நேற்று முன் தினம் இரவு மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் ‘பாடுமீன்’ கடுகதி ரயில் தாமதமடைந்த தனை பயணிகளுக்கு அறிவிக்காமையையிட்டு போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

மூன்று மொழிகளிலும் அறிவிப்பினை முன்னெடுக்க தவறிய அதிகாரிகளை ஒழுக்காற்று விசாரணைகளுக்கு உட்படுத்துமாறும் அமைச்சர் குமார வெல்கம பணிப்புரைவிடுத்துள்ளார்.

மேலும் இச்சம்பவத்தினால் அசெளகரி யங்களை எதிர்கொண்ட தமிழ் பேசும் பயணிகளிடம் தனது வருத்தத்தைத் தெரிவிப்பதாகவும் அவர் தினகரனிடம் கூறினார்.

கொழும்பு, கோட்டை ரயில்வே நிலை யத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு மட்டக்களப்பு நோக்கி புறப்படும் ‘பாடுமீன்’ பயணிகள் கடுகதி சேவை சுமார் 02 மணித்தியாலங்களுக்கு தாமதமாகியது.

ரயில் தாமதமாகுமென்பதனை முன் கூட்டியே அறிவிக்காமையினால் ரயில் பயணிகள் இரண்டு மணித்தியாலங்களுக்கு அசெளகரியங்களை எதிர்நோக்கினர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் ரயில் மேலும் ஒரு மணித்தியாலம் வரை தாமதமாகுமென சிங்கள மொழியில் மாத்திரம் அறிவிக்கப்பட்டதேயொழிய தமிழ் மொழியில் எவ்வித அறிவிப்புக்களும் முன்னெடுக்கப்படவில்லை. சிங்கள மொழியிலான அறிவிப்பு கூட தெளிவாக புரிந்துகொள்ளும்படியாக இருக்கவில்லை யென பயணிகள் தெரிவிக்கின்றனர்.

‘பாடுமீன்’ ரயிலில் பயணம் செய்ய காத்திருந்த 99 சத வீதத்தினர் தமிழ் பேசுபவர்களாவர். கொழும்பு கோட்டை போன்ற பிரதான ரயில்வே நிலையத்தில் தமிழ் மொழியில் அறிவிப்பு செய்யாமை தமிழ் பேசுவோருக்கு பாரிய சிக்கல்களை தோற்றுவித்திருந்தது. இதனால் இவர்கள் 2 மணித்தியாலங்களாக செய்வதறியாது தடுமாறியதாக ரயில் பயணியொருவர் தினகரனுக்குக் கூறினார்.

இது தொடர்பில் போக்குவரத்து துறையமைச்சர் குமார வெல்கமவை தினகரன் தொடர்பு கொண்டு கேட்டபோது, மூன்று மொழிகளிலும் அறிவிப்பு செய் யப்பட வேண்டியது அரசாங்கத்தினால் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும் கொழும்பு கோட்டை போன்ற பிரதான ரயில் நிலையத்தில் அது சரிவர பின் பற்றாமை பாரிய தவறு என்பதனை ஏற் றுக்கொண்ட அமைச்சர், இதனால் சிர மங்களை எதிர்நோக்கிய பயணிகளுக்கு தனது வருத்தத்தையும் தெரிவித்தார்.

இதேவேளை, ரயில்வே போக்குவரத் துக்குப் பொறுப்பானவர்கள் அறிவிப்பு செய்யப்பட வேண்டியது கட்டாயம். தமிழ் மொழியில் அறிவிப்பு செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு செய்யாமல்விட்டது தவறு எனக் கூறினார்.

இனிமேலும், இது போன்ற நிலைமை தொடராமல் இருக்கும் வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்படு மெனவும் அவர் நம்பிக்கையளித்தார்.

–தினகரன்

Published by

Leave a comment