புதிய பாலர்கள் வரவேற்பு நிகழ்வு 2013

 06MSM. அப்துல்லாஹ் JP. SDO

புதிய காத்தான்குடி அஸ்-ஸஹ்றா, ஹிஸ்புல்லாஹ், ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலைகளின் 2013 ஆம் ஆண்டுக்காக அனுமதிக்கப்பட்ட புதிய மாணவா்களை வரவேற்கும் நிகழ்வு (01.01.2013 செவ்வாய்க்கிழமை) பாடசாலை மண்டபத்தில் தலைவா் மௌலவி அல்ஹாஜ். AL. ஆதம்லெப்பை JP (பலாஹி /தேச மாண்ய) அவா்களின் தலைமையில் நடை பெற்றது.

மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திரு. T. கோபாலகிருஷ்னன் (மட்டக்களப்பு மாவட்ட பாலர் பாடசாலைகளின் கல்விப் பணியக செயல்பாட்டுப் பணிப்பாளர்)  அவா்களும் புதிய காத்தான்குடி அஸ் -ஸஹ்றா, ஹிஸ்புல்லாஹ், ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலைகளின் நிர்வாக சபை உறுப்பினா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

மேற்படி நிகழ்வின்போது பிஸ்மி அல்குர்ஆன் மத்ரஸாவின் பணிப்பாளர் அஷ்-ஷெய்ஹ் MBM. பிர்தௌஸ் (நழீமி) BA அவா்கள் சிறப்புரையாற்றினார்கள் என்பதும் குறிப்பிடக்தக்கது.
10 03040805 07

Published by

Leave a comment