அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை இரண்டாம் பிரிவு- குடியிருப்பு வளவிலு ள்ள கிணற்று நீர் – சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை – கிணற்றிலிருந்து நீரை எடுத்த போது, நீரின் நிறம் சிவப்பாக மாறியிருந்த தாக வீட்டு உரிமையாளர் எஸ்.எல். அவ்வா உம்மா தெரிவித்தார். சுமார் 07 வருடங்களுக்கு முன்னர் இக்கிணறு நிர்மாணிக்கப்பட்டது எனவும், ஆனால்- எந்தவொரு சந்தர்ப் பத்திலும் இவ்வாறு நீரின் நிறம் மாற வில்லை என்றும் வீட்டு உரிமையாளர் மேலும் கூறினார். கடற்கரையிலிருந்து சுமார் 01 கிலோ மீற்றர் பகுதிக்குள் குறித்த கிணறு அமைந்துள்ளது.
இதேவேளை, இக்கிணற்று நீரைப் பார்வையிடுவதற்காக தினமும் வருகை தரும் ஏராளமான பொது மக்கள், போத்தல்களில் நீரைக் கொண்டு செல்வதை யும் அவதானிக்க முடிகிறது. எவ்வாறிருந்த போதும், மேற்படி கிணற்று நீரின் நிற மாற்றத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் ஆராய்ச்சிபூர்வமாக அறியப்பட வில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
– தினகரன்
Leave a comment