இலவச சீருடை வழங்கும் நிகழ்வு

HPS logo Jpeடீன் பைரூஸ்.

புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையில் 2013 ம் ஆண்டுக்காக புதிதாக  தெரிவு செய்யப்பட்ட  மாணவா்களுக்கான இலவச சீருடை வழங்கும் நிகழ்வு 01.01.2013 செவ்வாய்க்கிழமை பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது.

காத்தான்குடி நகர சபையின் கௌரவ உறுப்பினரும்,  புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் நிறை வேற்றுப் பணிப்பாளருமான கௌரவ அல்ஹாஜ். HMM. பாக்கீர்  BA.JP அவா்களின் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்படி பாசாலை இயங்கி வருகின்றது.

இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவா்களுக்கான அனுமதிக் கட்டனம், சீருடை, பாடசாலைப்பை என்பன இலவசமாக வழங்கப்பட்டதுடன் வங்கிக் கணக்கும் இலவசமாக திறந்து கொடுக்கப்படுகிறது.

இன்றைய நிகழ்வின் போது பாலர் பாடசாலையின் நிர்வாகிகளான அல்ஹாஜ். HMM. பாக்கீர்  BA.JP,  MHM. ஹமீத் JP, MIM. பைசர், MM.   ரஹ்மதுல்லாஹ், M. முக்தார், SM. முஹைதீன், ALD.  பைரூஸ் JP,  உட்பட பொற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சுமார் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும்  இப்பாலர் பாடசாலையானது  பிரதியமைச்சர்  கௌரவ அல்ஹாஜ். MLAM. ஹிஸ்புல்லாஹ் MA.MP அவர்களின் 25 வது வருட அரசியல் வாழ்வின் நிறைவாக திறந்து வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment