காத்தான்குடியினை அன்மித்து இருக்கின்ற சிறிய கிராமங்களில் ஒன்றுதான் கா்பலா கிராம் ஆகும் இந்த கிராமம் மறைந்த மாமனிதர் மா்ஹூம் Dr. பரீட் மீராலெப்பையின் சிந்தனையில் உருவானவையாகும்.
இங்குதான் ஜாமியஉல் மானார் ஜீம்ஆ பள்ளிவாயல் அமைந்துள்ளது. இப்பள்ளி வாயலின் நிர்வாகத்தின் கீழ் குா்ஆன் மதரா ஒன்று இயங்கி வருகின்றது. இந்த மதரசாவினைப் பொறுத்த மட்டில் அடிப்படை தேவைகள் பல உள்ளன. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற அதிகமான ஏழைகளின் பிள்ளைகளே இம் மதரசாவில் கல்வி பயில்கின்றனா். மிகச் சிறிய ஊதியத்தில் பாரிய பொறுப்புடன் மிக சிரமத்துடன் ஆலிமாக கடமை புரிபவா்தான் பாலமுனையைச் சோ்ந்த சகோதரா் முகம்மது பரீட் அவா்கள்.
அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத சூழலில் இம் மதரசாவில் குா்ஆன் கற்று வந்த 08 மாணவா்கள் காத்தான்குடி குா்அன் மதரசாக்கள் அபிவிருத்திக் குழுவினால் நடாத்தப் பட்ட அல்குா்ஆன் பரீட்சையில் 170 புள்ளிகளுக்கு மேல் எடுத்து 08 மாணவா்களும் சித்தியடைந்துள்ளனா். அல் ஹம்துலில்லாஹ்.
இவ்வாறான ஏழை மாணவா்களின் பல தேவைகள் சுட்டிக் காட்டப்பட்டன. உங்களாலும் முடிந்தால் இக்கிராம சிறார்களின் நலன் கருதி 100/= ருபாவாயினும் உதவுங்கள். அல்லாஹ் றஹ்மத் செய்வான்.
PEOPLE”S BANK KATTANKUDY A/C NO. 065 100 11 0000 315.





Leave a reply to muhammadu jabir Cancel reply