உலகம் டிசம்பர் மாதம் 21ம் திகதி அழியும் என்பது முட்டாள் தனமானது. இதுகுறித்து பெரியார் கல்வி நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு விளக்கி விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும்” என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2012 டிசம்பர் 21 ஆம் திகதியோடு உலகம் முடிந்துவிடும், அழிந்து விடும், மாயன் கலண்டரில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டு விட்டது என்று ஒரு வதந்தியை பரப்பி வருகின்றனர். பரிகார பூஜை, புனஸ்காரம் என்று பக்தி வியாபாரம் செலுத்திட இது ஒரு புது உத்திபோல நவீன கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது ஆதாரமற்ற அறிவியல், வானவியல், ஆகியவற்றிற்கு முற்றிலும் மாறான கற்பனை, கட்டுக்கதை, என்று பிரபல நாசா அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மூத்த ஆய்வாளர் டாரன்யோமென்ஸ் தெரிவித்துள்ளார்.
எட்டு கிரகங்கள் ஒன்று சேர போகின்றன. அதனால் உலகம் அழிய போகிறது என்று சுமார் 1520 ஆண்டுகளுக்கு முன்பே புரளியை கிளப்பி விட்டனர். இப்போது டிசம்பர் 21ம் திகதி உலகம் அழிய போகி றது என்பதற்கு ‘நிபுரு’ என்ற ஒரு பெரிய பொருள் வந்து மோதி அழிக்கும் என்னும் கதை கட்டியுள்ளனர்.
இதற்கு எவ்வித சாட்சியங்களோ, ஆதாரங்களோ கிடையாது என்றும் கூறி டெலஸ்கோப்பில் ஆதரவு சான்றுகளோ, இப்படி சூரிய குடும்பத்தில் புவி ஈர்ப்பின் மூலம் ஏதுமில்லை என்று கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதத்திலும், பூமியும் சூரியனும் ‘மில்கிவே’ என்ற பின் பாதை அருகில் ஒரே நேர்க் கோட்டில் வருவது வழக்கமான நிகழ்வே ஆகும்.
பெரியார் கல்வி நிறுவன மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து மூடநம்பிக் கையை பெரிய வியாபார புழுதியை உடைத்தெறிய வருகிற 20ம் திகதி (வியா ழக்கிழமை) மக்கள் மத்தியில் விழிப்புணர் வுப் பிரசாரம் செய்வார்கள்.
தஞ்சை பெரியார் மணியம்மை பல் கலைக்கழகத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்கும் அறிவியல் விளக்கமும் அன்றைய தினம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதற்கிடையில் இலங்கையின் வான்பரப்பில் கடந்த சில நாட்களாக அடையாளம் காண முடியாத பறக்கும் பொருள் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
மாயன் கலண்டரின்படி உலகம் அழியப் போகிறது என்ற பீதி உலகம் முழுவதையும் ஆட்டுவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இலங்கையின் வான்பரப்பில் நள்ளிரவில் மர்ம பொருள் பறந்து செல்வதை பலரும் பார்த்திருக்கின்றனர்.
பீதியை ஏற்படுத்தக்கூடிய வேற்று கிரகவாசிகளின் நடமாட்டமோ என்ற அச்சமும் இலங்கையர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. அண்மையில் இலங்கையின் பல பகுதிகளில் சிகப்பு மழை பொழிந் திருந்தது.
இந்த நிலையில், இது தொடர்பான ஆராய்ச்சியை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ஜெமினிட் என்ற விண்கற்களின் மழை ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் பெய்யும் என்றும் இலங்கையின் வான்பரப்பில் தென்படுவதும் அதுவே என்றும் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
-தினகரன்
Leave a comment