உறங்கிப் போய்விட்ட காத்தான்குடி காழி நீதி மன்றம்

-விசேட நிருபர்

காத்தான்குடியின் காழி நீதிபதி  அல்ஹாஜ்.ஏ.எம்.ஹிழுா். JP (ஓய்வுபெற்ற அதிபா்) அவா்களின் சமகால பிரச்சினையால் காத்தான்குடி காழி நீதி மன்றம் உறங்கிப் போய்விட்டது. தான் நிரபராதி என்று சொல்லி வரும் காழி நீதிபதி, தான் இராஜினாமா செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

அப்படியாயின், காத்தான்குடியின் புதிய காழி நீதிபதி யார்…….? என்ற வினா இப்போதே எழ ஆரம்பித்து விட்டது.

உண்மையில் ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களின் பணங்களையும், அவா்களுடைய உரிமைகளையும் கொள்ளையடிக்கின்றவா்களுக்கு இறை தீர்ப்பு உண்டு என்பதனை மனதினில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

விடயமறியாத பொது மக்கள் கடந்த 12.12.2012 – 15.12.2012 சனி/ஞாயிறு ஆகிய திங்களில் தங்களின் வழக்குகளுக்காக காத்தான்குடி காழி நீதி மன்றத்துக்கு வருகை தந்து, நீதி மன்றம் திறக்கப் படாமையால் ஏமாற்றமடைந்து சென்றதாகவும் அதனால் தற்போது நீதி மன்றம் மறு அறிவித்தல் வரை  திறக்கப்படமாட்டாது என அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

மேற்படி காத்தான்குடி காழி நீதிமன்றத்திற்கான புதிய கட்டிடம் கர்பலா வீதி விக்டரி விளையாட்டு மைதானத்தில் கட்டப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.DSC00030DSC00029

DSC00027DSC00026

Published by

2 responses to “உறங்கிப் போய்விட்ட காத்தான்குடி காழி நீதி மன்றம்”

  1. Mustaffa Abdul Ghaffoor Avatar
    Mustaffa Abdul Ghaffoor

    Kalvanai policesaha niyamikkum poathe ithaiyellam ethirparththirukka veandum……!!?

    1. neethy niyayam theady makkal nadum idam kathi manram namathu uorin nelaimai ippadya? tharam illathe warkalai thalaiwarkalakky unkalai soothippoom ithu iraiwakku keyame naal nerugki vittathu.

Leave a reply to muhammadu jabir Cancel reply