பொருளாதார அடிமைத்துவம்.
காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஏற்பாட்டில் விசேட பயான் 12.12.2012 புதன்கிழமை இஷா தொழுகையின் பின் இஸ்லாமிய வழிகாட்டல் மஸ்ஜிதில் நடை பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம பேச்சாளராக அஷ்செய்ஹ்-அல்.ஹாபிழ். ஹூசைன் சின்னலெப்பை (BCS) அவா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.பயான் நிகழ்வின் இறுதியாக “ கேள்வி+பதில் ” இடம் பெற்றது. வட்டியும் பொருளாதார அடிமைத்துவம், வட்டி தொடர்பான பல கேள்விகள் கேட்கப்பட்டன.
காத்தான்குடியைப் பொருத்த மட்டில் எந்த ஒரு வங்கியும் இஸ்லாமிய அகீதாவுக்கு உட்பட்ட வகையில் இயங்கவில்லை என்பதனை இஸ்லாமியக் கண்னோட்டத்தினில் தெளிவு படுத்தினார்.
‘வங்கிகள் பல இஸ்மியப் பெயா்களை மாத்திரம் வைத்துக் கொண்டுள்ளன என்றும், பண்டி இறைச்சி விற்பனை செய்கின்ற இடத்தில் மாட்டு இறைச்சியினை விற்பனை செய்ய முடியாது. அது போலவே வட்டியுடன் தொடா்புடைய வங்கியுடனான வியாபார முறையும் இன்று இருப்பதாகக் கூறினார்.






Leave a comment