பலித்தது பலஸ்தீன கனவு

w-1[1]ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனம் உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலை யைப் (non-member observer state) பெற்றுள்ளது. கடந்த வியாழன் மாலை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில்138 நாடுகளின் ஆதரவுடன் இது நிறைவேற்றப்பட்டது. வாக்களிப்பில் வெ;றறி பெற்றதும், மேற்குக் கரையிலும் காசாவி லும் மக்கள் பட்டாசுகள் கொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

வியாழனன்று காலை ஐ.நாவில்உறுப்புரிமையற்ற பார்வயாளர் அந்hஸ்துக்கான விண்ணப்பத்தை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் சமர்ப்பித்திருந்தார். அதனையடுத்து மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் பலஸ்தீனம் வெற்றிபெற்றது. ஐ.நாவில் உறுப்பினரல்லாத பார்வையாளர் அந்தஸ்தைப் பெற, பாதுகாப்புச் சபையின் அங்கீகாரம் தேவையில்லை. 193 அங்கத்தவர்களைக் கொண்ட பொதுச்சபையின் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் போதுமானது. வியாழனன்று மாலை இது குறித்து நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் 132 நாடுகள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்து, மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தின் மூலம் பலஸ்தீனத்துக்கு உறுப்;புரிமையில்லாத பார்வையாளர் அந்தஸ்து கிடைத்துள்ளது.

அல்பேனியா, அண்டோரா, அவுஸ்திரேலியா, ஐக்கிய ராச்சியம், பஹாமாஸ், ஜேர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட 41 நாடுகள் வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை.

கனடா, செக் குடியரசு, இஸ்ரேல், பனாமா அமெரி;க்கா உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

மூன்று நாடுகள் சமூகமளிக்கவில்லை.

சரியாக 65 ஆண்டுகளுக்கு முன்னர், 1947 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி பலஸ்தீனத்தை இரு நாடுகளாகப் பிரித்து ஐநா தீர்மானம் நிறைவேற்றி இஸ்ரேலை ஒரு தனி நாடாக்கியது.

கடந்த 28 ஆம் திகதி வரை ஐநாவில் ஒரு தனியுரு (நவெவைல)வாகக் கருதப்பட்ட பலஸ்தீனம் 29 ஆம் திகதியிலிருந்து ஒரு உறுப்புரிமையற்ற நாடாகக் கருதப்படும். இனி ஐநா பொதுச் சபை விவாதங்களில் பலஸ்;தீனம் கலந்து கொள்ளலாம் ஆனால் வாக்களிக்க முடியாது. வத்திக்கானும் ஐநா பொதுச் சபையில் ஒரு உறுப்புரிமையற்ற நாடாக உள்ளது.

ஐநாவின் முழு உறுப்புரிமை பெறுவதற்கான எல்லாத் தகுதிகளும் பலஸ்த்தீனத்துக்கு உண்டு. ஆனால் 2011இல் ஐநா பாதுகாப்புச் சபையில் முழு உறுப்புரிமை பெற கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முழு உறுப்புரிமைக் கோரிக்கையைக் கைவிட்டு உறுப்புரிமையற்ற ஒரு நாடாக பலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்ளும் முன்மொழிவு பொதுச் சபையில் முன்வைக்கப்பட்டது.

ஏற்கனவே 132நாடுகள் பலஸ்தீனத்தை ஒரு நாடாக தனிப்பட்ட ரீதியில் அங்கீகரித்துள்ளன. உறுப்புரிமையற்ற ஒரு நாடால் ஐநாவின் மற்ற அமைப்புக்களில் உறுப்புரிமை கோர முடியும். சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு, கடல் சட்ட ஒப்பந்தம், சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பனவற்றிலும் பலஸ்தீனம் உறுப்புரிமை கோர முடியும்.

நீர்வளம், கடல், வானம் ஆகியவற்றில் உரிமை கொண்டாட முடியும். ஆனால் ஐநாவைப் பொறுத்தவரை பலஸ்தீனம் ஒரு இறைமை உள்ள நாடு அல்ல. ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பலஸ்தீனர்களின் நாளாந்த அவல வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதையும் கொண்டுவர மாட்டாது.

பலஸ்;தீனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்றவற்றில் உறுப்புரிமை கோரினால் அமெரிக்கா தனது அதற்கான நிதி உதவிகளை நிறுத்தும் என்று மிரட்டியுள்ளது. இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் இனக்கொலைகள் தொடர்பாக பலஸ்தீனம்; குற்றவியல் நீதிமன்றம் சென்றால் தனது பதில் நடவடிக்கைகள் மோசமானதாக இருக்கும் என இஸ்ரேலும் பலஸ்;தீனத்தை மிரட்டியுள்ளது. ஆனால், ஐநா தீர்மானத்தின் பின்னர் பலஸ்;தீனத் தலைவர் மஹ்மூட் அபாஸ் முறிந்துபோயுள்ள இஸ்ரேலுடனான பேச்சு வார்த்தையை மீள ஆரம்பிக்க தான் தயார் என அறிவித்துள்ளார்.

ஐநா பொதுச் சபையில் பலஸ்தீன தலைவர் மஹ்மூத்; அபாஸ் உரையாற்றும்போது இஸ்ரேலைக் கடுமையாகச் சாடி இருந்தார். அபாஸின் உரை ஒரு சமாதான விரும்பியின் உரை அல்ல என இஸ்ரேலி யப் பிரதமர் பெஞ்சமின் நெத்தென்யா{ஹ தெரிவித்தார்.

இஸ்ரேல் மேற்குக் கரையில் தொடர்ந்தும் சட்ட விரோதக் குடியேற்றங்களை உருவாக்கினால்; தாம் நீதிமன்றம் போக வேண்டி வரும் என்றார் பலஸ் தின வெளிநாட்டமைச்சர்

1993இல் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பலஸ்;தீன விடுதலை இயக்கமும் இஸ்ரேலும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பலஸ்;தீன அதிகாரசபை உருவாக்கப்பட்டது. ஆனால் பலஸ்தீன அதிகாரசபை தனது வருமானத்திற்கு இஸ்ரேலிலும் அமெரிக்காவி லும் தங்கியிருக்கிறது. இதனால் இஸ்ரேலையும் அமெரிக்காவையும் அனுசரித்துப் போக வேண்டிய நிலையில் பலஸ்தீன மக்கள் உள்ளனர்.

2007இல் பலஸ்தீனர்களின் இரு பிரிவுகளான ஹமாஸ் இயக்கமும் பலஸ்தீன விடுதலை இயக்கமும் மோதிக் கொண்டன. ஹமாஸ் காசா நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. பல சிறு கூறுகளாக இஸ்ரேலால் பிரிக்கப்பட்ட மேற்குக் கரையோரத்தில் பலஸ்;தீன விடுதலை இயக்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சில பிரதேசங்களில் இஸ்ரேலும் பலஸ்தீன விடுதலை இயக்கமும் இணைந்து அதிகாரம் செலுத்துகின்றன. ஹமாஸ் இஸ்ரேலுடன் ஆயுத முனையில் மோதிக் கொண்டிருக்க பலஸ்தீன விடுதலை இயக்கம் பேச்சுவார்த்தை மூலம் முன்னோக்கிச் செல்கிறது

மேற்கு ஐரோப்பிய நாடுகள் பல பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. முறையான பிரச்சாரம் இதற்கு உதவியுள்ளது. பலஸ்தீனியப் பிரச்சனை ஊடகங்கள் முதல் கொண்டு பல்கலைக்கழகங்கள் வரை ஆய்வு செய்யப்படுகின்றன. பாடசாலைகளிலும் பலஸ்தீனப் பிரச்சனை ஆய்வு செய்யப்படுகின்றது. இதனால் பலஸ்தீனியர்களின் போராட்டத்தின் நியா யமும் இஸ்ரேலின் அக்கிரமமும் ஐரோப்பிய நாடுகளில் நன்கு உணரப்பட்டுள்ளன்.

ஸ்;பெயின், கிரேக்கம் போன்ற நாடுகள் மத்திய கிழக்கில் தமது வர்த்தகத்தை விரிவுபடுத்த விருப்பம் கொண்டுள்ளன.

பலஸ்தீனத்திற்கு எதிரான நிலைப்பாடு இதற்கு உதவாது என்பதை அவை உணர்ந்தே பலஸ்தீனத்தை ஐநாவில் ஆதரித்தன. ஏற்கனவே அரபு நாடுகளுடன் நல்ல வர்த்தக உறவைக் கொண்ட பிரித்தானியா தனது வர்த்தக நலன்களைக் கருத்தில் கொண்டே நடுநிலை வகித்தது. பலஸ்தீனத்திற்கு எதிராக வாக்களிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட Nஜர்மனி நடுநிலைவகித்ததும் வர்த்தக நலன்கள் சார்ந்தே.

அரபு நாடுகளில் அதிக ஆதிக்கம் செலுத்த விரும்பும் பிரான்ஸ் லிபியா, சிரியா, ஈரான் போன்ற நாடுகளின் பிரச்சனையில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டது. இஸ்ரேலுடன் மறைமுகமாக நல்ல உறவையும் பிரான்ஸ் பேணிவருகிறது. ஆனால் தற்போது பிரான்ஸில் ஆட்சியில் இருப்பவர்கள் அங்கு வாழும் முஸ்லிம்களின் வாக்கு வங்கியில் பெரிதும் தங்கியிருக்கின்றனர். பிரான்ஸ் பலஸ்த்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்கு அங்கு வாழும் முஸ்லிம்களே முக்கிய காரணம்.

-தினகரன்

Published by

Leave a comment