செல்போன்களில் விரைவான இணைய தளங்கள்

-K. மிப்றாஸ்

google-phone[1]கம்ப்யூட்டர் வேகத்தில் இணைய தளங்கள் திரையில் விரியக்கூடிய செல்போன்கள் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

இதுகுறித்து முன்னணி கம்ப்யூட்டர் நிறுவன உயரதிகாரி ஒருவர்  கூறியதாவது: செல்போனில் இணையதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கம்ப்யூட்டர் மற்றும் லப்டப் ஆகியவற்றின் திறன் அதிகம் என்பதால் இணைய தள பக்கங்கள் விரைவாக திறக்கும். செல்போன் அதில் பின்தங்கியிருந்தது.

இப்போது செல்போன் புரசசர் திறனும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் கம்ப்யூட்டருக்கு இணையான வேகத்தில்  இணைய தள வசதி கொண்ட செல்போன்கள் விற்பனைக்கு வரும். அவை கடிகார வேகத்தில் 2.5 ஜி.எச்.இசட் (GZH) திறனுடன் இருக்கும். 2008ம் ஆண்டில் கம்ப்யூட்டரின் வேகத்தை அதிகரிக்க 2.5 ஜி.எச்.இசட் சிப்களை இன்டெல் தயாரித்தது.

அந்த திறன் இப்போது செல்போனுக்கு வருகிறது. செல்போனில் இப்போதைய நிலையில் 1.6 ஜி.எச்.இசட் வேகமே அதிகபட்சமாக உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 2.5 ஆக அது அதிகரிக்கும்போது கம்ப்யூட்டர் வேகத்தில் செல்போனில் இணைய தளங்களை பார்க்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Published by

Leave a comment