டீன் பைரூஸ்.
‘நாளைய உலகை வெற்றி கொள்ள கல்வி ஞானத்தை வளா்ப்போம்’ என்ற இலக்கை நோக்கிய காத்தான்குடி பரீட் பௌண்டேசனின் கல்வித்திட்ட பயனத்தின் கீழ், க.பொ.த.சா/த மாணவா்களுக்கான கல்விக் கருத்தரங்கு (01.12.2012 சனிக்கிழமை)இன்று காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடை பெற்றது.சுமார் நான்கு நாட்களாக இடம் பெற்று வந்த இன்நிகழ்வின் இறுதி நிகழ்வு மிகக் கூடுதலான மாணவ,மாணவிகளின் பங்கு பற்றுதலுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி நிகழ்வுகள் யாவும் கௌரவ பிரதியமைச்சா் தாஜுல் மில்லத் அல்.ஹாஜ்.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் கே.எல்.எம்.பரீட் ஆகியோர்களின் வழிகாட்டலில் காத்தான்குடி மண்ணில் பல வருடங்களாக இடம் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.




இன்றைய நிகழ்வில் காத்தான்குடி மட்.அல்.அமீன் வித்தியாலய ஆசிரியா் ஜனாப்.எம். அன்வா்.பீ.ஏ, பல்கலைக் கழக மாணவா்களான ஜனாப் எம். றிபாஸ், ஹலீம், றுபைல் ஆகியோரும்
கலந்து கொண்டனர்.

![dsc00038[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/dsc000381.jpg?w=530&h=397)
Leave a comment