இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகனேரி பகுதியில் மின்சாரம் தாக்கியதால் நான்கு காட்டு யானைகள் கொல்லப்பட்டிருக்கின்றன.
33,000 வாட்டு உயரழுத்த மின்சார கம்பங்கள் சரிந்து விழுந்ததினால், அவற்றில் சிக்கியே இந்த யானைகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சம்பவம் நடந்த இடம், காட்டு யானைகள் கூட்டமாக நடமாடும் இடம் என்றும் அங்கு கூட்டமாக வந்த யானைகள் மின்கம்பிகளில் சிக்கியிருக்கலாம் என்றும் காவல்துறையினர் கூறியிருக்கின்றனர்.
BBC/Tamil
Leave a comment