பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு

– ACM. சப்ரி

காத்தான்குடி பிரதேசத்தில் சேரும்  குப்பைகளை  காத்தான்குடி நகர சபையினால்   கடற்கரைக்கு அருகில், நீர் உள்ள பள்ளத்தாக்கில் கொட்டப்படுகின்றது.

இது மழைக்காலம் ஆகையால் தேங்கி நிற்கும் நீருக்குள் குப்பை  கொட்டப்படுவதனால் டெங்கு  மலேரியா போன்ற  கொடிய நோய்க்  காரணிகள் பெருகுவதோடு  வாந்திபேதி,  கொலரா போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்பு  இருக்கின்றது.

 இதனை சூழவுள்ள  பகுதிகளில்  துர்நாற்றம் வீசுகின்றது. இது கடற்கரை  பிரதேசமாகையால் இங்கு இளைப்பார  வரும் மக்களும் கடும் அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர்.  இதனை சுற்றி  ஒரு பாடசாலையும்  இரண்டு பள்ளிவாயல்களும் உள்ளது.

இதனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்தும் எந்த  பலனும்  இல்லை . இதே தவறை  சாதாரண பொது மகன் செய்யும் பட்சத்தில் பிரதேச சபையால்,  பொலிசாரினால்,  பொது சுகாதார உத்தி யோகத்தர்களால்,  வழக்குகள்  எழுதப்பட்டு தண்டப்பணம் அறவிடுகின்றனர்.

எனவே  பிரதேச வைத்திய அதிகாரி அவர்களே,  சுகாதார பரிசோதகர்களே, மாகாண  சபை உறுப்பினர் சிப்லி பாருக் அவர்களே, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களே!

இவ்விடயத்தில்அக்கரைகொண்டு, துரிதமாக நடிவடிக்கை எடுக்குமாறு ஊர்மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

Published by

One response to “பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு”

  1. Poor Sabry, they won’t listen to you, it’s your fate.. You voted for them and its time for you to experience this kind of things.

Leave a reply to Issath Cancel reply