-MJ
துப்பாக்கி என்றால் அனைவராலும் மறக்க முடியாத ஓர் ஆயுத தளபாடமே ஏ.கே 47 எனும் இயந்திரத் துப்பாக்கியாகும். ஐக்கிய சோவியத் யூனியன் (USSR) என்ற பிரமாண்டமான வல்லரசு நாட்டின் ‘அப்டோமட் கலஸ்னினோவோ‘ (Avtomat Kalashnikova /Автомат Калашникова) என்பவரால் ஏ.கே 47, இலக்குத்தவறா இயந்திரம் என அழைக்கப்படும் இத்துப்பாக்கி வடிவமைப்பதற்கு (Designing) திட்டமிடப்படுகிறது.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் (WW II) இறுதி ஆண்டான 1945 ல் இவ்வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டது. 1946 ல் உலக மகா யுத்ததின் பின்னர் பரீட்சாத்திக்கப்படும் நோக்கில் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு பரீட்சிக்கப்பட்டு வந்தது.
எனினும் 1947ம் ஆண்டு சோவியத் யூனியனின் இராணுவம் ( USSR Army) முதன்முதலாக ஏ.கே.47 ஐ உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அது வரை இயந்திரத் துப்பாக்கி (Machine Gun ) என்ற போர்வையில் பரீட்சாத்திப்பட்டு வந்த இத்துப்பாக்கி, 1947ல் ஓர் தயாரிப்பாக உத்தியோகபூர்வமாக அறிமுகமானதால், இத்துப்பாக்கியைக் கண்டுபிடித்த அவரது பெயரின் இரு முதல் எழுத்துக்களையும் வெளியான ஆண்டினையும் சுருக்கமாகக் குறிப்பிட்டு ஏ.கே. 47 அறிமுகமானது. எனினும் உலகுக்கு 1949ம் ஆண்டிலிருந்து விற்பனைக்கு விடப்பட்டது.
4.78 கிலோ நிறையையுடையதும், 880 மி.மீ. நீளமும் கொண்டதான இத்துப்பாக்கியின் மெகஸின் (Magazine) 30 ரவைகளை (Bullet) சாதாரணமாகக் கொண்டது. எனினும் 10,20,30,40,75 மற்றும் 100 ரவைகளைக் கொண்ட மெகஸின்களும் இருக்கின்றன. இதன் சுடு குழல் 415 மி.மீ. நீளம் கொண்டது. ஒற்றையாகவும் (Single), ஓட்டோ (Auto) முறையிலும் சுழன்று சுடக்சுடியது மாத்திரமன்றி அதிதீவிரமானதும்கூட.
‘சைக்கிளிக் ரேட்’ எனப்படும் சழற்சி சுடுமுறையில் ஒரு நிமிடத்துக்கு 600 ரவைகளை வாரி சுட்டு வீசக்கூடியது. இயந்திர முறையில் ஒரு நிமிடத்துக்கு 100 ரவைகளை உதிரக்கூடியது. சாதாரண சுடு தூரம் 500 மீட்டர்களைக் கொண்டதாக அமைந்தாலும் இலக்கு 350 மீட்டராகும். இயந்திரத்துப்பாக்கிகள் சரித்திரத்தில் அப்போது வாயு (Gas) மூலமான சுடு உத்தியைக் கொண்டமைந்து உலக இராணுவத்தை அதிசயிக்க வைத்தது.
மரமும் உலோகமும் கொண்டமைந்த AK 47, இதுவரைக்கும் 100 மில்லியன் தாயாரிக்கப்பட்டிருக்கின்றன. உலகின் அநேகமான இராணுவத்தினர் பொதுவாக இத்துப்பாக்கியைப் பயன்படுத்திவருவதும் குறிப்பிடத்தக்கது.
1959-1975 வரை இடம்பெற்ற வியட்னாம் யுத்தத்தில், வியட்னாம் கெரில்லா போராளி அமெரிக்க இராணுவத்தின் பிரதான முகாமுக்குள் நுழைந்து ஒரே ஒரு நிமிடத்தில் பல நூறு இராணுவத்தினரை சுட்டு வீழ்த்திவிட்டு கச்சிதமாகத் தப்பிக்கொண்டார். அதிர்ச்சியில் விழித்தது அமெரிக்கா! ஒரு நிமிடத்தில் இத்தனை வீரர்கள் எப்படி கொல்லப்பட்டனர் என அதிசயித்து ஆராய்ந்தனர். அதன் பின்னரே குறித்த வியட்நாம் போராளி பயன்படுத்தியது ஏ.கே 47 என்பதை உணர்ந்து சோவியத் யூனியனின் தயாரிப்பை வியந்தது.
இதன் பின்னர் ஏ.கே 47 யை ஒத்த இயந்திரத்தைக் கையாண்டு உலகின் பல நாடுகள் துப்பாக்கிகளைத் தயாரித்து வருகின்றன. இந்தவகையில் சீனா T56, ஈரான் கே.எல்.எஸ், இஸ்ரேல் ஐ.எம்.ஐ, பாகிஸ்தான் ஏ.கே47-பி.கே.10, இந்தியா ஏ.கே.47 என்பவற்றைத் தயாரித்து வருகின்றன.
இலங்கையில் ஆயுத தொழிற்சாலை இல்லாமையால், இலங்கை ரி56 துப்பாக்கிகளை பெரும்பாலும் சீனாவிலிருந்து கொள்வனவு செய்து வருகிறது.
Leave a reply to AK-47 துப்பாக்கியை உருவாக்கியவர் காலமானார். | WWW.YOURKATTANKUDY.COM Cancel reply