சிறுவர் பெருநாள் பசார்!

– டீன் பைரூஸ்

1990ம் ஆண்டுக்குப் பின்னர் இம்முறை செயின் மௌலானா தைக்கிய்யாவின் கீழ் சிறுவர் பெருநாள் பசார் இடம்பெற இருக்கின்றது.

காத்தான்குடி 06, மீரா பாலிகா முன்றலில் ‘பிஸ்மில்லாஹ்’ சதுக்கத்தில் இக்கடைத் தொகுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த வருடங்களைப்  பார்க்கிலும் இம்முறை குறைவான கடைகளே இதுவரை கட்டப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

எனினும் அன்று முதல் 1990 ஆம் ஆண்டுவரை காத்தான்குடி  பிரதான வீதியில் பெருநாள் பசார் இடம்பெற்று வந்தன.

எனினும் இம்முறை பிரதான வீதியில் அல்லாமல் டொக்டர் அகமட் பரீட் மாவத்தையின் தொடக்கத்திலிருந்து உட்பக்கமாக கடைகள் கட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by

One response to “சிறுவர் பெருநாள் பசார்!”

Leave a reply to fancyjabeer Cancel reply