இறைவன் உதவியால் நாம் கடந்த 3 மாதங்களாக எதிர்பார்த்திருந்த குறிப்பாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தற்பொழுது முடிவுக்கு வந்திருக்கின்றது.
வெற்றி தோல்விகளின் பின்னர் மக்களின் ஆதருவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து சகோதரத்துவமாக அனைவரும் ஒன்றுபட நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
முலமைச்சர் பதவி குறிப்பிட்டுக் கூறமுடியாதிருப்பினும் பல ஒன்றுக்கு முரனான செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இவற்றுள் கூட்டுக்கட்சிகளுக்கு முக்கியத்துவமளிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஷாஅல்லாஹ் விரிவான ஆக்கங்களுடன் விரைவில் சந்திப்போம்.
மக்களின் தீர்ப்புக்கு நாங்களும் மதிப்பளித்து வெற்றியாளர்களின் மகிழ்ச்சியில் ‘உங்கள் காத்தான்குடி’ யும் பங்கெடுக்கின்றது.
தோற்றவர்கள் தனது பிழைகளையும், மக்களின் மனங்களை உணரத்தவறிய விடயங்களையும் சரிகண்டு எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் எனவும் கேட்டு இத் தேர்தல் விசேட சேவையினை நிறைவு செய்கின்றோம்.
எங்களோடு பங்கெடுத்து எங்களுக்கு ஆதரவளித்த ஆயிரக்கணக்கான உள்ளுர் மற்றும் கடல்கடந்த வாசகர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்!
என்றும் அன்புடன்
இயக்குநர்
உங்கள் காத்தான்குடி
Leave a comment