இணையம் தோன்றிய வரலாறு

இணையப் பயன்பாடு குறித்து நாம் எல்லோரும் அறிந்திருந்தாலும் அதன் தோற்ற வரலாறு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1960 ஆம் ஆண்டு வாக்கில் கணினிகளின் பயன்பாடு அதிகரித்த போதிலும், ஒரு கணினியிலுள்ள தகவல்களை மற்றொரு கணனியிடம் பகிர்ந்துகொள்ளும் நிலை வரவில்லை. இது கணினி பாடத்திட்டங்களை நடத்திவரும் பல பல்கலைக்கழ கங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அமெரிக்காவின் டார்ட்மெளத் மற்றும் பெர்க்லீ பல்கலைக்கழகங்கள் ஐ. பி. எம். கணினிகளைப் பெருமளவில் பயன்படுத்தி வந்தன. அந்த பல்கலைக்கழகங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்துவந்த இப்பிரச்சினை பற்றி ஐ. பி. எம்.க்கு தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்சினையே இணையம் உருவானதற்கு அடி கோலியது எனலாம்.
இணையம் தொடங்குவதற்கான செயல்முறை திட்டத்திற்கு அடி கோலியவர் லிக்லைடர் என்பவர் ஆவார். இதனாலேயே இவர் இணையத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு கணினியுடனும் தொடர்பு கொண்டு ஒன்றுக்கொன்று மற்றதற்காகச் செயல்படக் கூடும் என்ற செயல் முறையைக் கொண்டு வந்தவர் இவர்தான். அவர் அத்தகைய இணைப்பை உருவாக்கி அதற்கு கலக்டிக் வலையமைப்பு  (“Galactic Network”) என்று பெயரிட்டார்.

இது மேற்சொன்ன அந்த பல்கலைக் கழகங்களில் வெற்றிகரமாக சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டது. இதன் பின்னர் அமெரிக்க இரா ணுவத்தில் இரகசிய தகவல்களை உடனுக்குடன் அனுப்பவும், பெறவும் இத்திட்டம்  The Advanced Research Projects Agency Network (ARPANET) என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டது.

லிக்லைடரின் கலக்டிக் வலைய மைப்புத் திட்டம் 1962இல் DARPA (Defence Advanced Research Projects Agency) என்ற அமைப்பாக உருவானது. அதன் பின் இதனுடன் ARPANET இணைய இன்டர்நெட் உருவானது.

1965 ஆம் ஆண்டு மிக மெதுவாக இயங்கும் தொலைபேசியைப் பயன்படுத்தி எம். ஐ. டி. பல்கலையின் பேராசிரியர் லாரன்ஸ் ரொபர்ட்ஸ் (Lawrence G. Roberts) தோமஸ் மெரில் (Thomas Merrill) என்ப வருடன் இணைந்து மாசசுசட்ஸ் என்னும் இடத்தில் இயங்கிய ஹிகீ2 கணினியை கலிபோர்னியாவில் இயங்கிய கி. 32 என்ற கணினியுடன் இணைத்தார். பின்னர் சில தகவல்கள் ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு பரிமாறப்பட்டது. இது தான் இணையத்தின் முதல் தகவல் பரிமாற்றம். அப்போதைய தொலை பேசி இணைப்புகள் இத்தகைய இணைய இணைப்புகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இணைய தொடர்பில் தகவல்களை அனுப்ப பெகெட் ஸ்விட்சிங்  என்னும் வழிமுறை கையாளப்படுகிறது. கோப்புகளில் உள்ள தகவல்கள் பொட்டலம் பொட்டலமாக சேர வேண்டிய சர்வர் கணினிக்கு அனுப்பப்பட்டு அங்கு இணைக்கப் படுகின்றன. லியோனார்ட் கிளெ யின்ராக் என்பவர் இந்த முறையைக் கண்டுபிடித்தார். ஆக்டோபர் 29 1969ல் மாணவர்கள் பலருடன் இணைந்து இதனை இயக்கினார். இயக்கத் தொடங்கியவுடனேயே சிஸ்டம் கிராஷ் ஆனது வேறு ஒரு நிகழ்ச்சி. இப்போது வரை அந்த முறையே பயனப்டுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கணினிக்கான முதல் மவுஸ் 1968ல் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெ ற்ற கணினி கண்காட்சியில்  Douglas Engeibart  என்பவரால் அறி முகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப் பட்டது. இதன் பின்னரே இணைய பயன்பாடு எழுச்சியுற தொடங்கியது எனலாம். பல்வேறு வகையான ஆராய்ச்சி மற்றும் புதிய முறைகள் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக 1990 களில் இணையம் மிக பிரபல மடைய தொடங்கியது. 1993 ஆம் ஆண்டில் மிக வேகமாக இதன் பயன்பாடு உலகெங்கும் பர வியது. ஐந்து கோடி பேரை ரேடியோ சென்றடைய 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சி அதே அளவில் சென்றடைய 13 ஆண்டுகள் ஆனது. ஆனால் இணையம் இந்த இலக்கை அடைய 5 ஆண்டுகளே ஆனது.

சரி உலகில் அதிக அளவில் இணை யம் பயன்படுத்துவோர் யார் என்று நினைக்கியர்கள். அமெரிக்கா என்றா…?இ தவறு சுவீடன் நாட்டவரே. இங்குள்ள மக்களில் 85 சதவிகிதத்தினர் இணை யத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சதவிகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று ஆராய்ச்சி முடி வொன்று கூறுகிறது.

இணைய பயன்பாட்டில் வரும் www என்பதன் அர்த்தம் நம் எல்லோருக்கும் தெரிந்ததே (world wide web). ஆனால் இது எப் போதிலிருந்து பயன்பாட்டிற்கு வந்தது, யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.  டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners Lee) என்பவர் தான் 1990 ஆம் ஆண்டு இந்த சொற்றொடரை உரு வாக்கிப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

-தினகரன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s