ஜப்பானில் அடுத்தடுத்து மிகவும் சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள்

japan earth quakeடோக்யோ: ஜப்பானின் குவாமோட்டோ நகருக்கு அருகே இன்று சனிக்கிழமை அதிகாலை இரண்டு மிகக்கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. மிகவும் சக்தி வாய்ந்த 7.1 மற்றும் 7.4 அளவு கொண்ட இரண்டு நிலநடுக்கங்கள் அங்கு அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளன. தொடர்ச்சியான அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன. இதையடுத்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஒரு மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பக் கூடும் எனவும் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

கியூஷூ தீவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டனர். கடல் நீரில் கடுமையான சுழற்சி இருக்கும் எனவும் ஜப்பானிய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

japan earth quake

பல இடங்களில் இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளனர் என்றும் அவர்களை மீட்குமாறு கோரி தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வருவதாக ஜப்பானின் தேசிய ஒலிபரப்பு நிறுவனம் கூறுகிறது. இப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் நேற்று ஏற்பட்ட அதிர்வுகளில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

Published by

Leave a comment