இரண்டாம் உலக மகா யுத்தம் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்த தருணம். ஹிட்லரின் நாசி விமானங்களின் குண்டு வீச்சுக்களையும் முறியடித்து, அமெரிக்க “USS குயின்ஸி” எனும் பிரமாண்டமான போர்க்கப்பல் சக பாதுகாப்பு கப்பல்களுடன், சுயஸ் கால்வாயை அண்மித்த “கிரேட் பிட்டர்” ஆற்றல் நங்கூரமிட்டிருந்தது.

கப்பலில் இருந்தவர் FRD என அழைக்கப்படும் அமெரிக்க ஜனாதிபதி ஃப்ராங்லிங் ரூஸ்வெல்ட். பிரித்தானிய பிரதமர் வின்சன்ட் சேர்ச்சில் மற்றும் சோவியத் யூனியனின் தலைவர் ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்த பின்னர் குயின்ஸி சுயஸ் கால்வாயை அடைந்தது.
1400 மைல்களுக்கு அப்பால் அரண்மனையில் அமர்ந்திருந்த சவுதி மன்னர் இப்னு சஊத் என அழைக்கப்பட்ட அப்துல் அஸீஸ் இற்கு தன்னை உடனடியாக வந்து சந்திக்குமாறு ரூஸ்வெல்டின் தந்தி பறந்தது.
இது மிக முக்கியமான சந்திப்பு என்பதாகவும், அதனால் குடும்பத்துடன் இன்றி தனியாக வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்ததால், தனது வாழ்நாளிள் பஸ்ரா நகருக்கு அப்பால் சென்றிராத மன்னர் தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் எகிப்திற்கு விரைந்தார்.
14-02-1945, முற்பகல்: இரும்பு மனிதராகப் போற்றப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிக்கும், சவுதி மன்னர் அப்துல் அஸீஸ் இற்கும் இடையில் கிரேட் பிட்டர் ஆற்றில் நங்கூரமிடப்பட்டிருந்த போர்க்கப்பல் அடித்தளத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இடம் பெற்றது.
சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ரூஸ்வெல்ட் மன்னரிடம் கூறினார்.
“யுத்தம் முடிவுக்கு வரக்கூடிய நிலையில் இருக்கிறது. எங்களுக்கும் எமது நேச நாடுகளுக்கும் நீங்கள் இலவசமாக தொடர்ந்தும் எண்ணெய் (Oil ) வழங்குவதற்கு மிக்க நன்றி”.
மன்னர் புன்னகைத்துக் கொள்கிறார்.
ரூஸ்வெல்ட் தொடர்ந்தார்..
“ ஜேர்மனி நாசிகளின் கொடுமைகளால் லட்சக்கணக்கான யூதர்கள் அகதி முகாம்களி்ல் தவிக்கின்றனர். வளைகுடாவில் அரபிகளாகிய நீங்களே மெஜோரிட்டி. அதனால் பத்தாயிரம் யூத அகதிகளையாவது பலஸ்தீனில் குடியேற்ற வேண்டும், அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்”
ஆவேசமடைந்த மன்னர்
“லா” (இ்ல்லை) என்றார்.
ரூஸ்வெல்ட் இந்த பதிலை மன்னரிடமிருந்து எதிர்பார்க்க வில்லை.
சிற்றுண்டி ஓய்வுக்குப்பின்னர் மீண்டும் சத்திப்பு தொடர்ந்து.
“ எண்ணெய் உடன்படிக்கை அமெரிக்காவுடன் மாத்திரமே பேணப்பட வேண்டும். அதன் வர்த்தகம் அமெரிக்க டொலரில் இடம்பெற வேண்டும். இவ்விடயங்களை செய்தால் அமெரிக்காவில் எத்தனை ஜனாதிபதி வந்தாலும் உங்கள் அரண்மனை இறுதிப் பரம்பரை வரைக்கும் அமெரிக்கா உங்களைக் காக்கும், பாதுகாப்பு, ஏனைய உதவிகள், உங்கள் பிற்ளைகளுக்கு அமெரிக்கக் கல்வி…”
என்று முடித்தார் ரூஸ்வெல்ட்.
மகிழ்ச்சியோடு எழும்பி வந்த மன்னர் அப்துல் அஸீஸ், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஜனாதிபதி ரூஸ்வெல்ட் இன் அருகில் வந்து தரை விரிப்பில் உட்கார்ந்து அவரைக் கட்டியணைத்தார்.
பின்னர்…
“பார்த்தீர்களா காயங்களை? நாட்டிற்காக சண்டை பிடித்ததில் ஏற்பட்டவை இவை” தனது காலைக் காட்டினார் மன்னர்.
மதிய உணவை இருவரும் சேர்ந்து மகிழ்ந்துண்டனர். பெருமதி வாய்ந்த அன்பளிப்புக்களை ரூஸ்வெல்ட் மன்னருக்கு வழங்கி கௌரவித்தார்
அரண்மனை திரும்பியதும் “தன் வாழ்நாளில் முதன் முதலில் சந்தித்த நல்லதொரு நண்பன்” என ஜனாதிபதி ரூஸ்வெல்ட் ஐப் புகழ்ந்த மன்னர் அப்துல் அஸீஸ், “இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்” என கூறியிருந்ததுடன் தனக்குக் கிடைத்த அன்பளிப்புக்களையும் பார்த்து பெருமிதமடைந்து வந்தார்.
வரலாற்றில் முதன் முதலாக இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற இவ் இரகசிய சந்திப்பின் பின்னர், மன்னர் பரம்பரையின் கட்டுப்பாட்டில் உள்ள சவுதி அரேபியா அமெரிக்காவை மீறி எதுவும் செய்யாது.
உதவி, தர்மம் அடிப்படையில் தங்களுடைய பணத்தை, பொருட்களை உலகில் ஏழை நாடுகளுக்கும், தேவையுடையோருக்கும் வழங்கும்.
அமெரிக்கா தலையிடும் முஸ்லிம் நாடுகளின் அரசியல் விடயங்களில் மன்னராட்சி உள்ளவரை சவுதி தொடர்ந்தும் மௌனம் காக்கும். இது அவர்களது ஒப்பந்தங்களில் ஒன்று.
பரக்கத் செய்யப்பட்ட பலஸ்தீன் மண்ணுக்கு ஈஸா (அலை) வரும் வரைக்கும் பெரும் சோதனை உண்டு.
அம்மக்களுக்காக தொடர்ந்தும் பிரார்த்திப்போம்.
– ஜலீஸ் முஸ்தபா
Leave a comment