ஜனவரி, 1984 காலை 9 மணி. வழமை போல் காத்தான்குடி பிரதான வீதி வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
காத்தான்குடி 6, பிரதான வீதியில் அமையப்பெற்றிருந்த மக்கள் வங்கி, ஊழியர்கள் மற்றும் “ஷொட் கண்” உடன் நிறுத்தப்பட்ட காவலருடன் உள் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது.
வங்கி திறப்பதற்கு முன் வங்கிக்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர் குழு, காவலரை முடக்கி, கொள்ளையடித்தனர்.
கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள், மற்றும் பணத்தின் அன்றைய பெறுமதி 35 மில்லியன் ரூபாய்கள்.
இலங்கை வரலாற்றில் முதன் முதலில் இடம்பெற்ற மிகப்பெரும் கொள்ளையாக அன்று பதியப்பட்டது.
இரண்டு துப்பாக்கி வேட்டுக்களை வானை நோக்கித் தீர்த்த பின், வாகனம் ஆரையம்பதியை நோக்கி தப்பித்துச் சென்றது!
இக்கொள்ளையில், TELO, EPRLF, PLOT ஏதாவதொரு இயக்கத்திற்கு தொடர்பிருக்கலாம் என அப்போது பேசப்பட்டது.
முகமட் ஜலீஸ், இங்கிலாந்து
Leave a comment