2022 வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

கொழும்பு: 2022 வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை நவம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் 7 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.

2022 வரவுச் செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி 5.00 மணிக்கு இடம்பெறும்.

Published by

Leave a comment