கொரோனா தொற்றால் உயிரிழந்த இருவரின் ஜனாசாக்கள் இன்று மாலை முதன்முறையாக அடக்கம்

மட்டக்களப்பு: கொரோனா தொற்றால் உயிரிழந்த இரு
முஸ்லிம்களின் ஜனாசாக்கள் இன்று மாலை
முதன்முறையாக அடக்கம் செய்யப்பட்டதாக
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா
தெரிவித்தார்.

File picture


இதேவேளை, கொரோனா தொற்றால்
உயிரிழப்போரின் சடலங்களை மட்டக்களப்பின்
, அம்பாறையின் இறக்காமம் ஆகிய
இடங்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக கிழக்கு
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

நிபுணர் குழுவின் பரிந்துரையின் பிரகாரம்
கொரோனாவால் மரணிப்போரின்
சடலங்களை புதைப்பதற்கு அரசாங்கம்
அனுமதி வழங்கியிருந்த நிலையில், சுகாதார
வழிகாட்டல்களும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், மட்டக்களப்பின் ஓட்டமாவடி
காகிதமநகர், மஜ்மா நகர் பகுதியில் தெரிவு
செய்யப்பட்ட காணியில் கொரோனாவால்
உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம்
செய்வதற்கான ஏற்பாடுகள் இன்று
முன்னெடுக்கப்பட்டிருந்தன.


ஓட்டமாவடி – மஜ்மா நகரிலுள்ள காணியில்
பெக்கோ இயந்திரங்கள் கொண்டு குழிகள்
தோண்டப்பட்டு கொரோனாவால்
உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேவேளை கொவிட் வைரஸ் தொற்றுக்கு
ஆளாகி மரணிப்பவர்களின் சடலங்களை
அடக்கம் செய்யும் நடவடிக்கை இன்று முதல்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு
அறிவித்துள்ளது.


அதன் பிரகாரம் கொவிட் தொற்றுக்குள்ளாகி
மரணித்த இருவரது சடலங்கள் கிழக்கு
மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட பிரதேசம்
ஒன்றில் அடக்கம் செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு
விடுத்துள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment