LTTE இனரின் மனித உரிமை மீறல் காணொளி

விடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் சிறுவர்களுக்கு யுத்த பயிற்சி வழங்கியமை, விலங்குகளை வைத்து குண்டு வெடிப்பு மற்றும் போர் பயிற்சிகளை மேற்கொள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஆவணமொன்று, YouTube உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

‘தைரியத்தின் பிறகு உள்ள உண்மை’ (Truth Behind Dare) எனும் பெயரில் Lanka Courier எனும் YouTube தளத்தினால் குறித்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வீடியோ காட்சிகள் முன்னாள் விடுதலைப் புலிகளிடமிருந்து பெறப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவை உரிய முறையில் உறுதிப்படுத்தப்பட்டவை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவ்வீடியோ ஆவணத்தில், சிறுவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைக்கப்படுதல், அவர்களுக்கு சயனைட் குப்பிகள் வழங்குதல், போர் பயிற்சிகள் வழங்குதல் உள்ளிட்ட காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நாய்கள், ஆடுகள் போன்றவற்றை துப்பாக்கி சுடுதல் மற்றும் கண்டி வெடி சோதனைகள், குண்டு வெடிப்பு சோதனைகளுக்கு பயன்படுத்தும் காட்சிகளும் காண்பிக்கப்பட்டுள்ளன.

எச்சரிக்கை: இதில் வரும் காட்சிகள் சிலருக்கு கொடூரமாக இருக்கலாம்

https://youtu.be/mQ6L7Y99AT4

Published by

Leave a comment