3 DIG உள்ளிட்ட 21 பொலிஸாருக்கு இடமாற்றம்

கொழும்பு: பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் மூவர், பதில் பிரதி பொலிஸ் மாஅதிபர்ஒருவர், பொலிஸ் அத்தியட்சகர்ஒருவர், 10 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், 06 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் ஆகியோருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேவையின் அவசியம் கருதி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கேகாலை மாவட்ட பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பதில் பொலிஸ் மாஅதிபர் ஏ.எச்.எம்.டபிள்யூ.சீ. அழககோன், கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான பதில் பொலிஸ் மாஅதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, குருணாகல் மாவட்ட பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மாஅதிபர் ஜீ.எம்.பீ. சிறிவர்தன, பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் மாஅதிபரின் அலுவலக பிரதி பொலிஸ் மாஅதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

பொலிஸ் மாஅதிபரின் அலுவலக பிரதி பொலிஸ் மாஅதிபராக இருந்த பிரதி பொலிஸ் மாஅதிபர் டீ.பீ. சந்திரசிறி, கேகாலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபராக இடமாற்றம் பெற்றுள்ளார்.

Published by

Leave a comment