பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசலில் விசேட துஆ பிராத்தனை

– ஏ.எல்.எம்.ஷினாஸ்

மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமராக மீண்டும் 4வது முறையாகவும் ஜனாதிபதி கோடட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் தமது வெற்றிக் கொண்டாட்டங்களிலும் மத வழிபாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசலில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நல்லாசி வேண்டி இன்று  (11.08.2020)  விசேட துஆ பிராத்தனை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் எம்.வை.எம்.ஹனிபா, கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment