இரு வைத்தியர்களிடையே மோதல்; இருவரும் வைத்தியசாலையில் அனுமதி

குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (07) காலை 9.30 மணியளவில் நிந்தவூர் ஆயுள்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த இரு வைத்தியர்களுக்கும் இடையே இருந்த நீண்ட கால முறுகல் நிலையே இம்மோதலுக்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ தினமன்று பணி நிமித்தம் இரு வைத்தியர்களும் வைத்தியசாலைக்கு சமூகமளித்த நிலையில் கடமை அறிக்கையிடும் புத்தகம் தொடர்பில் ஏற்பட்ட முறுகலில் ஆரம்பித்து கைகலப்பில் முடிவடைந்துள்ளது.null

இதன் போது இரு வைத்தியர்களின் மோதலினால் வைத்தியசாலையின் மருத்துவ சாதனங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் கதிரைகளும் உடைந்துள்ளன.

இச்சம்பவத்தினை அடுத்து அங்கு சென்ற சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதில் காயமடைந்த வைத்தியர் ஒருவர், நிந்தவூர் ஆதார வைத்தியசாலை விடுதி இல 5 இலும் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் மற்றுமொரு வைத்தியரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

(பாறுக் ஷிஹான்)

Pages: 1 2

Published by

Leave a comment