அரிசி இறக்குமதி தொடர்பில் ரிஷாத் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம்

கொழும்பு: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.கடந்த 2017ஆம் ஆண்டு, லங்கா சதொசாவுக்கு, அரிசி இறக்குமதி செய்யப்பட்ட விடயம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இன்று (20) முற்பகல் 11.30 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் முன்னிலையாகியதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Published by

Leave a comment