மேலும் 7 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய இன்று (31) பிற்பகல் 3.20 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள கணக்கின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 122 இலிருந்து 129 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய, இன்றையதினம் (31) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 07 பேர் இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (30) மொத்தமாக 05 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 129 பேரில் தற்போது 111 நோயாளிகள் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 16 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இருவர் மரணமடைந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவக் கண்காணிப்பில் தற்போது 104 பேர் வைக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

Published by

Leave a comment