இலங்கைக்கான பயணிகள் விமான சேவைகள் முடக்கம்

கொழும்பு: இலங்கைக்கு வருகை தரும் அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் இடைநிறுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முடிவெடுத்துள்ளார் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (17) இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொடர்பான விசேட கூட்டமொன்றின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை புதன்கிழமை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு விமான நிலையங்களை மூடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். 

இலங்கை வரும் அனைத்து விமானங்களையும் நிறுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். 

இலங்கைக்கான பயணி விமான சேவைகள் நாளை முதல் முடக்கம்

இதன்படி, இலங்கையின் பிரதான சர்வதேச விமான நிலையமாகத் திகழும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகள் இன்று மாலை 3 மணி முதல் இடைநிறுத்தப்படுகின்றன. 

பொருட்கள் மற்றும் சேவைகளுடனான விமான சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் இறுதியாக திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த சில நாள்களுக்கு முன்னர் மூடப்பட்டது.

Published by

Leave a comment