சுவிஸ் தூதரக ஊழியர் கைது

கொழும்பில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் ஊழியர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக அங்கொட மனநல வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (16) சி.ஐ.டி. குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் கைது செய்யுமாறு ஆலோசனை வழங்கினார்.

அதன்படி, அவர் கைது செய்யப்பட்டு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பொய் சாட்சியம் வழங்கியமை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும் சட்டமா அதிபரின் இணைப்பதிகாரியுமான அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment