சஹ்ரானுடன் நெருக்கமாக செயற்பட்டவர்களை புகைப்படங்களுடன் அம்பலப்படுத்துவேன்: ஹக்கீம்

சஹ்ரானுடன் யார் யார் தொடர்பு வைத்து எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை புகைப்படத்துடன் இன்னும் சற்றுநேரத்தில் அம்பலப்படுத்துவேன் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றில் சூளுரைத்துள்ளார். பாராளுமன்றில் சிறப்புரிமைக்கேள்வியொழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சஹ்ரானும் தானும் நெருக்கமாக இருந்த காணொளிகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டு தனக்கு எதிராக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நான் இன்னும் சற்று நேரத்தில் பாராளுமன்ற தொகுதியில் இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் பயங்கரவாதி சஹ்ரானுடன் நெருக்கமாக இருந்தது யார்,  அவருடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் யார் என்பதை புகைப்படங்கள் மூலம் அம்பலப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment