ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் சிலர் சஜித்துடன் இணைவு

கொழும்பு: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் சிலர் இன்றைய தினம் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்துகொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே இவ்வாறு ஆதரவு வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜேமுனி சொய்சா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் சிலரே இவ்வாறு சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட சுயாதீன உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் 44 பேர் சஜித்திற்கு ஆதரவாக இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment