நிபந்தனைகளுக்கு அடி பணியவோ, கெளரவத்தை விட்டுக்கொடுக்கவோ முடியாது: சஜித்

களுத்துறை: எனது அரசியல் வாழ்க்கையில் எனக்கென  தனியான அரசியல் அடையாளம் உள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு நிபந்தனைகளுக்கு அடி பணியவோ, கெளரவத்தை விட்டுக்கொடுக்கவோ முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நான் மற்றவர்களின் தேவைகளுக்கான செயற்படும் கைப்பொம்மையும் இல்லை. மக்களே எனது உறவினர்கள்.  அவர்களின் ஆணைக்கமையவே செயற்டுவேன். நான் இந்த  ஜனாதிபதி தேர்தலில் நேர்மையாகவே களமிறக்குகிறேன்.

மக்களுக்கு ஏற்ற மக்களுக்கான ஆட்சியை ஏற்படுத்துவதற்கும் புதிய யுகத்துக்கான புரட்சியை ஏற்படுத்துவதற்கும் மக்கள்  தனக்கு ஆணை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அமைச்சர் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து நாடுபூராகவும்  முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள்  பேரணிகளின்  தொடர்ச்சியாக அதன் நான்காவது  பேரணி இன்று (25) களுத்துறை – மதுகமையில்  நடைப்பெற்றது. 

இந்த பேரணியில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்துக்கொண்டதோடு அமைச்சர்களான கயந்த கருணாதிலக, ஹரின் பெர்னாண்டோ, ரவீந்திர சமரவீர,சுஜீவ சேனசிங்க, அஜித்பி.பெரேரா இராஜாங்க அமைச்சரான அசோக் அபயசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான துஷார இந்துநில், எஸ்.எம்.மரிக்கார்,ஹெக்டர் அப்புஹாமி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள். 

Published by

Leave a comment