சஊதி அரம்கோ தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை 30 வருடங்களில் இல்லாத அளவு உயர்வு

றியாத்: சஊதி அரசுக்குச் சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் கடந்த சனிக்கிழமையன்று ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. உலகளவில் செளதி அரேபியா மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஏழு மில்லியன் பரல்களை அந்நாடு ஏற்றுமதி செய்கிறது. தாக்குதலுக்குப் பிறகு அரம்கோ எண்ணெய் நிறுவனத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வர்த்தகத்தின் ஆரம்பத்தில் பெண்ட் க்ரூட் முதலில் 20 சதவீதம் வரை உயர்ந்தது. அதன்பின் பேரலுக்கு 69அமெரிக்க டாலர்களாக மாறியது. என 14.6 சதவீத உயர்வு இருந்தது. இது 2008ஆம் ஆண்டு பிறகு மிகப்பெரிய விலையேற்றம்.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கச்சா எண்ணெய்யின் விலை திங்களன்று சுமார் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

இதனால் தினமும் 5.7 மில்லியன் பரல் கச்சா எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்படும் என சஊதியின் ஆற்றல் துறை அமைச்சர் இளவரசர் அப்துலாசிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment