“அவசரகால சட்டத்தை பயன்படுத்திக்கூட எமது நிறுவனத்தை கைப்பற்ற முடியாது”- ஹிஸ்புல்லாஹ்

அவசரகால சட்டத்தை பயன்படுத்திக்கூட எமது நிறுவனத்தை கைப்பற்ற முடியாது. எனினும் அரசாங்கத்துடன் இணைந்து 50;50 என்ற அடிப்படையில் நிர்வாகத்தை பங்கிட நாம் தயார் என “பெட்டிகளோ கம்பஸ்நிறுவனத்தின் ஸ்தாபகரும் முன்னாள் கிழக்கு ஆளுநருமான எம்.எல்..எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்

ஈஸ்டர் தாக்குதலை அடுத்து “பெட்டிகளோ கம்பஸ்நிறுவனம் மீதும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்குழு அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அது குறித்த ஆய்வுகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் இன்று ஹிஸ்புல்லாஹ் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கருத்துக்களை முன்வைத்தார்

Published by

Leave a comment