அன்று “வஹாபிகளின் ஸலவாத்” இன்று ஹூப்பாகிப்போனது….?

  • உசேன்YKK

jamiul lafireenகாத்தான்குடி: புராதன காத்தான்குடியில் ரமழான் காலங்களில் தறாவீஹ் தொழுகைக்கு முன்னர் பள்ளிவாயல்களில் ஸலவாத் இடம்பெறுவது வழக்கமாக இருந்தது. அரேபியர்களின் வருகை நின்று, தழிழ்நாடு மற்றும் கேரளா வியாபாரிகளினதும், ஆலிம்களினதும் வருகைக்குப்பின்னர், ஆடை கலாசாரங்களிலும் மார்க்க விடயங்களிலும் தழிழ்நாட்டு முஸ்லிம்களைப் பின்பற்றி காத்தான்குடி முஸ்லிம்கள் மாற ஆரம்பித்தனர்.

இவ்வாறு சில ஆண்டுகள் ஓடிக்கொண்டிருக்கும்போது ‘ஸலவாத்து மாலை’ எனவும், ‘ஸலவாத்து மஜ்லிஸ்’ எனவும் ரமழான் ஸலவாத்துக்கள் ரமழானில் பள்ளிவாயல்களை பிடித்துக்கொண்டன.

முழுக்க முழுக்க நபி (ஸல்) அவர்களைப் போற்றி தமிழிலும், அரபியிலும் எழுதப்பட்ட இத்தகைய ஸலவாத்துக்கள் இஸ்லாத்துக்கு விரோதமான வரிகளையும் கொண்டிருந்தமை மறக்க முடியாது.

“அல்லாஹூம்ம ஸல்லி அலாமுஹம்மத்….
யாரப்பி ஸல்லி அலைஹிவஸல்லம்”

என்று ஆரம்பிக்கும் ஸலவாத்துதான் தமிழக ஆலிம்களின் வருகையிலிருந்து 1980 களின் ஆரம்பம் வரை காத்தான்குடியில் காலோன்றி இருந்தது.

jamiul lafireen.jpg 1
காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன்

இதன்பின்னர் 1980 களில் ஜாமியத்துல் பலாஹ்வில் ஹாபிழ் பட்டம் பெற்ற, காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயலில் தொழுவிப்பதற்காக அழைக்கப்படும் ஹாபிழ்களால் “ஸலாத்துல்லாஹ் ஸலாமுல்லாஹ் அலாதாஹா ரஸூலில்லாஹ்”
என்ற ஸலவாத் முதன்முதலில் சொல்லப்பட்டது.

புதுமெட்டில் ஹாபிழ்களின் இனிமையான குரலில் ஒலித்த இந்த ஸலவாத், காத்தான்குடி மக்களை வெகுவாக கவர்ந்தது.

எனினும், “இத்தகைய புதிய ஸலவாத் வஹாபிகளுடையது. இதனை தாங்கள் தங்களது பத்ரிய்யாவில் சொல்வதில்லை” என மௌலவி அப்துர் ரஊப் தரப்பினர் அப்போது கூறியிருந்தனர்.

ஆனால் இப்போது “ஸலாத்துல்லாஹ் ஸலாமுல்லாஹ்” எனும் ஸலவாத் காத்தான்குடியின் பூர்வீக ஸலவாத் எனும் கருத்தில் மௌலவி அப்துர் ரஊப் தரப்பினர் காணொளி ஒன்றினை வெளியிட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது!!

  • உசேன்YKK

Published by

Leave a comment