ஜூம்ஆ உரைகளின் ஒலிப்பதிவுகளை அமைச்சுக்கு அனுப்புமாறு வலியுறுத்தல்

மஸ்ஜித்களில் இடம்பெறும் அனைத்து ஜூம்ஆ உரைகள் மற்றும் ஏனைய உரைகளையும் ஒலிப்பதிவு செய்து அவற்றை முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்று முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்..ஹலீம் தெரிவித்துள்ளார்.

மேலும் எந்தவொரு கூட்டத்திற்கும் அல்லது ஜமாத்திற்கும் எவ்விதத்திலுமான வெறுப்பூட்டுகின்ற அல்லது தீவிரவாதமுள்ள கருத்துக்களை ஊக்கப்படுத்துவதற்கோ அல்லது பரப்புவதற்கோ இடமளிக்கவோ, அனுமதியளிக்கவோ கூடாது. மீறி செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Published by

Leave a comment