சாய்ந்தமருதில் தற்கொலை செய்த தீவிரவாதிகளின் உடல்கள் புதைப்பு: சிறுவர்களின் உடல்கள் நல்லடக்கம்

சாய்ந்தமருதில் தற்கொலை செய்த தீவிரவாதிகளின்10 உடல்கள் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் பொலிசாரினால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் தலைவர்களின் அறிவுறுத்தலுக்கேற்ப, மத அனுஷ்டானங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்படாது, குறித்த நபர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 

பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (02) மாலை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்தார். ஆயினும் குறித்த வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த 6 சிறுவர்களின் உடல்களையும், பொலிசாரின் தலையீட்டுடன், உரிய மத அனுஷ்டானங்களுக்கு அமைய இன்று (02) பிற்பகல் நல்லடக்கம் செய்யப் பட்டதாக, அவர் சுட்டிக்காட்டினார்.

Image: Facebook

Published by

Leave a comment