லண்டன் லூடன் விமான நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது !

சர்வதேச விமானமொன்றின் மூலம் இலங்கையர்கள் நால்வரும் லண்டனின் லூடன் விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை இரவு வந்திறங்கிய நிலையில் அவர்கள் நால்வரும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பான சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கைதுசெய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பயங்கரவாதச் சட்டத்திற்கமைய தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என பிரித்தானிய பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பிரித்தானியாவின் பெட்போர்ஷெயார் பொலிஸ் நிலையத்தில் குறித்த நால்வரும் தடுத்து வைக்கப்பட்டு ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Published by

Leave a comment