ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்தல்

  • றியாத் ஏ. மஜீத்

52595398_2422827251121532_1052887064833425408_nஅட்டாளைச்சேனை: தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) மாதாந்தக் கூட்டமும் அங்கத்தவர்களின் பெயர் விபரங்களை கணனிப்படுத்தல் மற்றும் ஒன்லைன் ஊடாக ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்தல் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இன்று சனிக்கிழமை (23) மாலை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை மண்டபத்தில் அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு ஒன்றியத்தின் தேசிய தவிசாளர் றியாத் ஏ. மஜீத், செயலாளர் பைசால் இஸ்மாயில், பொருளாளர் சுல்பிகா ஷரீப் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி தங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர்.

52595398_2422827251121532_1052887064833425408_n

நுஜா ஊடக அமைப்பின் அங்கத்தவர்களின் விபரங்களை கணனிப்படுத்தல் மற்றும் ஒன்லைன் ஊடாக ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்தல் வேலைத்திட்டத்தினை நுஜா ஊடக அமைப்பின் தலைவர் எஸ்.எம்.அறூஸ், தவிசாளர் றியாத் ஏ. மஜீத், செயலாளர் பைசால் இஸ்மாயில், பொருளாளர் சுல்பிகா ஷரீப் ஆகியோர் ஆரம்பித்து வைத்து அதற்கான விண்ணப்படிவங்களை அங்கத்தவர்களுக்கு வழங்கி வைத்தனர்.

Published by

Leave a comment