கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் “மஹிந்த” நிகழ்வு !

இஸ்லாமிய வணக்க வழிபாடுகளை மாற்று மதத்தினருக்கு தெளிவுபடுத்தும் திறந்த பள்ளிவாசல் நிகழ்வு (22) கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது. இஸ்லாமிய கல்வி நிலையம்மற்றும் கொழும்பு-03இல் உள்ள கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை ஆகியனஇணைந்துஇந்ததிறந்த பள்ளிவாசல் நிகழ்வைஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, மேல்மாகாண ஆளுநர் அசாத் ஷாலி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள், பௌத்த மத போதகர்கள், பாதுகாப்புத் தரப்பினர்,பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள்எனப் பலர் கலந்து கொண்டனர். இதன்போது இஸ்லாமிய கல்வி நிலைய தொண்டர்களாலும், பள்ளிவாசல் நிருவாக சபையினராலும் சிறந்த விளக்கங்கள் வழங்கப்பட்டன.

Published by

Leave a comment