இந்தியா முஸ்லீ்ம் நாடாகி விடாமல் மோடி தடுக்க வேண்டும்: நீதிபதி சென்

india senடெல்லி: இந்தியா ஒரு இந்து நாடு. இது முஸ்லீம்களின் நாடாக மாறி விடக் கூடாது. அதை தடுக்க மோடிஜியால்தான் முடியம் என்று மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபத சுதீப் ரஞ்சன் சென் கூறியிருப்பது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணையின்போது இப்படிப் பேசியிருப்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லீம்கள் அல்லாத பழங்குடியின மக்கள் இந்தியாவில் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் வசிக்க அனுமதிக்க வேண்டும்.

அவர்களுக்கு எந்தக் கேள்வியும் கேட்காமல், தாமதமே இல்லாமல் இந்தியக் குடியுரிமையை வழங்க வேண்டும். ஆவணம் கூட அவர்களிடம் கேட்கத் தேவையில்லை. இதற்கான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் சென் கூறியுள்ளார்.

அமோன் ராணா என்பவர் குடியுரிமை சான்றிதழ் கோரி மேகலாய ஹைகோர்ட்டில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சென் நேற்று தீர்ப்பு அளித்தார். அப்போது அவர் பேசியவை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நீதிபதியின் பேச்சு போல இல்லாமல் ஒரு அரசியல்வாதியின் பேச்சு போல நீதிபதி சென் குறிப்பிட்டவை இருப்பதாக விவாதங்கள் எழுந்துள்ளன.

Published by

Leave a comment