கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வுக்கு முப்பது வருடங்களில் கிடைத்த முதல் அமைச்சு

c0829851-c1c4-4bc5-815e-83be49563cddகொழும்பு: நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று வெள்ளிக்கிழமை (9) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு தனது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார்.

புதிய அமைச்சரவை நியமனத்தின் போது நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ஹிஸ்புல்லாஹ் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விசேட வேண்டுகோளுக்கு அமைய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பொறுப்பொன்று கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

c0829851-c1c4-4bc5-815e-83be49563cdd

1989இல் முதன் முதலாக பாராளுமன்றம் சென்ற கலாநிதி ஹிஸ்புல்லாஹ்விற்கு கடந்த 30 வருடங்களில் கிடைக்கும் முழு அமைச்சுப் பதவி இதுவாகும்.

Published by

Leave a comment