அமிலத்தில் கரைக்கப்பட்டதா ஜமால் கஷோக்ஜியின் சடலம்?

saudiஇஸ்தான்புல்: கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் சடலம் வெட்டப்பட்டு, பிறகு அமிலத்தில் கரைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துகானின் ஆலோசகரும், மூத்த துருக்கி அதிகாரியுமான யாசின் அக்டாய் தெரிவித்துள்ளார். இஸ்தான்புலில் கஷோக்ஜியை கொன்றவர்கள், அது குறித்த எந்த அடையாளத்தையும் விட்டுவிடக்கூடாது என எண்ணியிருக்கும் பட்சத்தில் “அதுமட்டுமே சாத்தியமான வாய்ப்பாக இருக்கக்கூடும்”, என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், கஷோக்ஜியின் சடலம், அமிலத்தில் கரைக்கப்பட்டதாக நிரூபிக்கும் எந்தவித தடயவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை.

ஹூரியத் டெய்லி செய்தித்தாளிடம் பேசிய அக்டாய், ”ஜமால் கஷோக்ஜியின் உடலை அவர்கள் வெட்டியதற்கு காரணம் , உடல் பாகங்களை அமிலத்தில் கரைப்பதற்காக இருக்கலாம்” என்று கூறினார். ”அவர்கள் கஷோக்ஜியின் உடலை வெட்ட மட்டுமில்லை, பின்னர் அதனை சாம்பலாக்கவும் செய்துள்ளார்கள் என்று தற்போது நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, கொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி ஓர் அபாயகரமான இஸ்லாமியவாதி என அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்காவிடம் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Published by

Leave a comment