றியாத்: சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி திட்டமிட்டே கொல்லப்பட்டார் என்கிறார் சவுதி அரேபிய அரசு வழக்குரைஞர் அல்-ஏக்பாரியா தெரிவித்துள்ளார். சவுதி-துருக்கி கூட்டு நடவடிக்கைப் படை அளித்த தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறியுள்ளார் என சவுதி அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்பு, ஜமால் கஷோக்ஜி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்கு வந்து திரும்பிச் சென்றுவிட்டதாக ஆரம்பத்தில் கூறிய சவுதி, அங்கே நடந்த ஒரு கைகலப்பில் அவர் இறந்துவிட்டார் என்று அந்நாடு கூறியது.
தற்போது அது திட்டமிட்ட கொலை என்றும் அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது. முன்னதாக, சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும் ஆடியோவை அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. இயக்குநர் ஜினா ஹேஸ்பல் கேட்டார் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
yourkattankudy/saudi
இந்தவாரத் தொடக்கத்தில் துருக்கி சென்றிருந்தபோது அந்த ஆடியோ பதிவை கேட்பதற்கு ஜினா அனுமதிக்கப்பட்டார் என்று அந்த செய்திகள் கூறுகின்றன. தாம் கேட்ட விவரங்கள் குறித்து அவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் விவரிக்க உள்ளார் என்றும் தெரியவருகிறது.
அமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஜமால் கஷோக்ஜி சவுதி அரசைப் பற்றி கடுமையாக விமர்சித்துவந்தவர். துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்துக்கு சென்ற அவர் திரும்பவே இல்லை. பிறகு அவர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.
Leave a comment