ஒடிசா: கோடிக்கணக்கில் பணம் தேவை என்ற வேண்டுதலுக்காக ஒடிசாவில் 9 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கிறான். இந்தியா, ஒடிசா மாநிலம் போலாங்கிர் மாவட்டத்தில் உள்ள சுந்திமுந்தா என்று கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த பகுதியை சேர்ந்த ஞானஷ்யாம் ராணா என்ற 9 வயது சிறுவன்தான் நரபலி கொடுக்கப்பட்டது. இவன் இந்த மாதம் 13ம் தேதி காணாமல் போய் இருக்கிறான். இதையடுத்து இவனது பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்கள். ஆனால் ஒருவாரம் ஆகியும் இவன் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று சுந்திமுந்தா அருகே இருக்கும் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான். காட்டுக்கு அருகே இருக்கும் ஆற்று பகுதி ஒன்றில் தலையில்லாமல் இவன் உடல் மட்டும் கிடைத்து இருக்கிறது. அதன்பின் வேறு ஒரு இடத்தில் தலை தனியாக கிடைத்து இருக்கிறது.
இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அங்கு நரபலி கொடுக்கப்பட்டதற்கான அடையலாம் காணப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அந்த கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டனர். விசாரணையின் முடிவில் அந்த சிறுவனின் தாய் மாமன் மற்றும் சகோதரனை சந்தேகத்தின் பெயரில் கைது செய்தனர்.
தாய்மாமனும், சகோதரனும், நரபலி கொடுத்து சிறுவனை கொலை செய்ததை போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். பல கோடி பணம் கிடைக்க வேண்டும் என்று வேண்டுதலுக்காக இப்படி செய்ததாக கூறியுள்ளனர். வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியாமல், இவர்கள் இருவர் மட்டும் இந்த நரபலியை செய்துள்ளனர்.
அவர்கள் நரபலிக்காக பயன்படுத்திய பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. நரபலிக்கு உதவி தலைமைறைவாக இருக்கும் சாமியாரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by
ஒடிசா: கோடிக்கணக்கில் பணம் தேவை என்ற வேண்டுதலுக்காக ஒடிசாவில் 9 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கிறான். இந்தியா, ஒடிசா மாநிலம் போலாங்கிர் மாவட்டத்தில் உள்ள சுந்திமுந்தா என்று கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த பகுதியை சேர்ந்த ஞானஷ்யாம் ராணா என்ற 9 வயது சிறுவன்தான் நரபலி கொடுக்கப்பட்டது. இவன் இந்த மாதம் 13ம் தேதி காணாமல் போய் இருக்கிறான். இதையடுத்து இவனது பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்கள். ஆனால் ஒருவாரம் ஆகியும் இவன் கண்டுபிடிக்கப்படவில்லை.
Leave a comment